நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தங்கம் விலையில் திடீர் சரிவு!

Silver Gold
By Vinoja Nov 10, 2026 05:17 AM GMT
Report

today (10.11.2026) Gold and Silver price:  இன்று  (நவம்பர் 10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்புக்குப் பின்னடைவாக அமைந்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தங்கம் விலையில் திடீர் சரிவு! | November 10Th Gold And Silver Price In Chennai

இந்நிலையில், நேற்று கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாங்கக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,255 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.1,06,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தங்கம் விலையில் திடீர் சரிவு! | November 10Th Gold And Silver Price In Chennai

இன்றைய விலை நிலவரம் 

ஆனால், இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.13,210 ஆகவும், சவரனுக்கு ரூ.360 சரிந்து ரூ.1,05,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,810 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.86,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தங்கம் விலையில் திடீர் சரிவு! | November 10Th Gold And Silver Price In Chennai

இதற்கிடையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.