சேலஞ்ச் கிரிக்கெட்; 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது நோவாஸ் அணி

By Thahir May 28, 2022 07:31 PM GMT
Report

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் தொடரிரல் வெலாசிட்டி அணியை வீழ்த்தி 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது நோவாஸ் அணி.

பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னோட்டமாக கருத்தப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

சேலஞ்ச் கிரிக்கெட்; 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது நோவாஸ் அணி | Novas Team Won The Championship For The 3Rd Time

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் மோதிய நோவாஸ் அணியும் வெலாசிட்டி அணிகளும் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்ட அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெலாசிட்டி அணி தொடக்கத்தில் இருந்து தடுமாறியது.

அடுத்தடுத்து வீராங்கனைகள் ரன் எடுக்க முடியாமல் அவுட்டாகினர்.அதிகபட்சமாக அந்த அணியின் லாரா வெல்வெட் 65 ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நோவாஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சூப்பர் நோவாஸ் அணி கைப்பற்றியது.