ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜோகோவிச்... பறிபோன பெருமை

Tennis Novak Djokovic Tokyo Olympic 2020
By Petchi Avudaiappan Jul 30, 2021 04:29 PM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் தோல்வி அடைந்தது மூலம் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடால், ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் பங்கு பெறாததால், ஜோகோவிச் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல அவரது ஆசை கானல் நீராக மாறிவிட்டது.

ஆம். ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவின் அரை இறுதி போட்டியில் களமிறங்கிய ஜோகோவிச் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜெவ்ரெவ்வை எதிர்கொண்டார். முதல் செட்டை 1- 6 என்ற கணக்கில் அவர் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அலெக்சாண்டர், இரண்டாவது செட்டை 6-3 என்றும், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஜோகோவிச்சிக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாமல், வெண்கலப்பதக்கத்துடன் ஜோகோவிச் வெளியேற உள்ளார் . அதேசமயம் ஒரே வருடத்தில் நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் பட்டம் வென்றால் வழங்கப்படும் கோல்டன் ஸ்லாம் விருதையும் இந்த ஒரு தோல்வியின் மூலம் ஜோகோவிச் தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.