ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார்.
ரயில்கள் மோதி விபத்து
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு,
நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil