அந்த வைரஸ் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியல : உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

who transmissible omicron
By Irumporai Nov 29, 2021 06:39 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

டெல்டா- கொரோனாவை காட்டிலும் அதிக வீரியம் கொண்ட ஒமிக்ரான் வகை  வைரஸ் அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதா என தெளிவாக தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தோன்றியதாக கூறப்படும் ஒமிக்ரான் வகை வைரஸ்  சர்வதேச நாடுகளை அச்சுறுத்தியுள்ளது, இந்த புதிய வைரஸ்  கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் அதீத வீரியம் கொண்டவை என்பதால் அதனை கவலைக்குரிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் :

ஒமிக்ரான் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை கொண்டிருப்பதாகவும், ஒமிக்ரான் பாதிப்பை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள பிசிஆர் பரிசோதனை உதவுவதாக கூறியுள்ளது.

அதே சமயம் ,தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசியால் ஒமிக்ரானை கட்டுப்படுத்த முடியுமா என்பதை அறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்,  ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித ஆதரங்களும் இல்லை எனவும்.

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஒமிக்ரான் வகை வைரசுக்கான அறிகுறிகள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாற்றுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது.