யாரு சார் இவங்க .. ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ ? - வைரலாகும் பொன்னியின் செல்வன் !
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பிரத்யேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றது.
அந்த வகையில் தற்போது நடிகையும், இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் படப்பிடிப்புத்தளத்தில் சிலர் நீல வண்ண உடையில் தங்களை முழுமையாக மூடிக்கொண்டுள்ளனர்.

இதனைப் பகிர்ந்த அவர், இவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல. தொழில்நுட்பக்கலைஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் மற்றொரு புகைப்படத்தில் அரண்மனை மதில் சுவர் மற்றும் அதன் அருகே வில் மற்றும் அம்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இது போர் காட்சிகள்
படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.