கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

corona highcourt
By Irumporai May 31, 2021 01:18 PM GMT
Report

கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கின் இன்றைய விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

அதில், கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் முன் முகம் பார்க்க உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுளளதாகதமிழக அரசு தெரிவித்தது.

மேலும், கொரோனா . தடுப்பூசிகளின் இருப்பு இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தது.

இதனைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.