''ஆப்கன் 20 -20 உலகக்கோப்பையில் பங்கேற்பது கஷ்டம்தான்" - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்

Afghanistan Tim Paine T20 World Cup
By Irumporai Sep 11, 2021 09:04 AM GMT
Report

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த டிம் பெய்ன்  ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளதால்  அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாட மற்றநாடுகள் மறுக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், தாலிப்ன்கள் தலிபான்கள் முடிவால், வரும் நவம்பர் கடைசியில் தொடங்கவிருந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருப்பதை வரவேற்பதாக டிம் பெய்ன் கூறியுள்ளார்.

அதே சமயம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளிலும் மகளிர் அணியும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்பதை டிம் பெய்ன் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், இருபது ஓவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று  கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.