அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை : ராகுல் காந்தி

Rahul Gandhi Bihar
By Irumporai Jun 16, 2022 11:37 AM GMT
Report

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.

அக்னிபத்

இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை :  ராகுல் காந்தி | Not Play With Fire With Fire Plan Rahul Gandhi

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை

சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், :

அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

அக்னிபத்..ராணுவ ஆள்சேர்ப்புக்கு கடும் எதிர்ப்பு - நாடு முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்!