ராணி எலிசபெத் இறுதி நிகழ்வு : இந்த மூன்று நாடுகளுக்கு அனுமதி இல்லை ஏன் தெரியுமா ?
லண்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறனத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராணி எலிசபெத் மரணம்
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் காலமானார். அவரது இறுதி சடங்கு வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று பக்கிஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படும் ரணியின் உடலுக்கு பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராணி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், இதில் மூன்று நாடுகளுக்கு மட்டும் பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாடுகளுக்கு தடை
ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்குத்தான் ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்புக் காரணமாக, ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்த பிரிட்டன் விரும்புகிறது. இதன் பொருட்டே ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையும் பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முயற்சியில்தான் ராணியின் இறுதி நிகழ்வில் ரஷ்யாவுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், ரஷ்யாவுக்கு துணையாக இருக்கும் பெலாரஸுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.