“அசிங்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி” - கண்ணீர் விட்ட கேப்டன்

AUSvsBAN Australiancricketteam mathewwade
By Petchi Avudaiappan Aug 10, 2021 01:42 PM GMT
Report

 வங்கதேச அணியுடனான டி20 தொடரை இழந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனான மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது. டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான தொடர் தோல்விகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆடுகளத்தின் தன்மையே தாங்கள் இவ்வளவு கேவலமாக தோற்க காரணம் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனான மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் எங்களது பங்களிப்பை சரியாக செய்யவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற மோசமான ஆடுகளங்கள் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது என வேட் கூறியுள்ளார்.