தோனி எனக்கு பிரண்ட்'ல இல்ல..ஒன்ன விளையாடினோம் அவ்ளோதான்!! யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் அனுபவங்களை குறித்து போட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ளார்.
யுவராஜ் சிங்
இந்திய அணியின் முக்கிய வீரராக கடந்த 2000-ஆம் ஆண்டில் துவங்கி தனது ஓய்வு வரை நீடித்தவர் யுவராஜ் சிங். 2007-ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த 6 சிக்ஸர்கள், 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் கலக்கி தொடர்நாயகன் விருதை வென்றது போன்றவற்றை இன்றளவும் ரசிகர்களுக்கு பிரபலமாகவே இருந்து வருகின்றது.
அவர், விளையாடிய காலத்தில் தான் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி, வளர்ந்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் தங்கள் இருவருக்கும் இருந்து நட்பு குறித்து யுவராஜ் சிங் போட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ளார்.
நெருங்கிய நண்பர்கள் இல்லை
யூடியூப்பில் டிஆர்எஸ் என்ற பக்கத்தில் பேசிய யுவராஜ் இருவரும் கிரிக்கெட்டின் காரணமாக மட்டுமே நண்பர்கள் என்று கூறினார். தானும் மஹியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்ற யுவராஜ், நாங்கள் கிரிக்கெட் காரணமாக நண்பர்களாக இருந்தோம் என்றும் ஒன்றாக விளையாடினோம் என்று கூறினார்.
மஹியின் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் வித்தியாசமானது என குறிப்பிட்ட யுவராஜ், அதனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் நாங்கள் கிரிக்கெட்டினால் மட்டுமே நண்பர்கள் என்று கூறி நானும் மஹியும் சென்றபோது மைதானத்தில் 100%க்கு மேல் நம் நாட்டுக்காக கொடுத்தோம் என்றார். இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.