நாங்கள் வன்னியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல : திருமாவளவன் பேச்சு
நாங்கள் பாமகவிற்கு எதிரானவர்கள்,வன்னியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். என்எல்சி நிறுவனத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய சுரங்கங்களுக்கு கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போரும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
எந்த கொம்பனாலும் சிதைக்க முடியாது
அதில் பேசிய திருமாவளவன் , அரசியல் காரணங்களுக்காக அல்ல. கட்சிகளுக்காக அல்ல. விவசாயிகளுக்காக இப்பேரணியை நடத்தினோம். திமுகவும் இந்த 17 கோரிக்கைகளுக்கும் உடன்பட்டவர்கள் தான். இந்த கூட்டணியை எந்தக்கொம்பனாலும் சிதைத்துவிட முடியாது.
வன்னியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல
பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களை எதிர்க்கின்றோம். அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. பாஜகவின் புத்தி சாதியவாத புத்தி, சனாதன புத்தி. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள். அதனால் நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.
ஒட்டுமொத்த தமிழகத்திலும் வடமாநிலத்தவர்கள் குவிந்து வருகின்றனர். இந்தி பேசும் மக்களை திரட்டுவோம் என மறைமுகமாக சதி போன்று உள்ளது. இதில் சதி உள்ளதாக தோன்றுகிறது என தெரிவித்தார்.