போப் மறைவை அப்படியே கணித்த நாஸ்ட்ரடாமஸ் - இன்னும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..
நாஸ்ட்ரடாமஸ்ஸின் 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு வைரலாகி வருகிறது.
போப் பிரான்சிஸ் மறைவு
கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து சிறிது உடல்நலம் தேறி வாடிகன் திரும்பினார். மேலும், நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாடிகன் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களை பார்த்து சந்தோஷத்துடன் கையசைத்தார். இந்நிலையில் தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இந்நிலையில், போப் குறித்து சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துச் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. நாஸ்ட்ரடாமஸ் என்றழைக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த தத்துவ ஞானியும் ஜோதிடருமான மைக்கேல் டே நாஸ்ட்ரெடேம்,
நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு
தமது காலத்துக்குப்பின் இந்த உலகில் நடக்கப்போகும் போர்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் எனப் பலவற்றை முன்பே கணித்துக் கூறியுள்ளார். அவற்றில் பெரும்பாலான விஷயங்கள் நடந்துள்ளது. "உலகின் மிக வயதானதொரு போப் மறைவுக்குப்பின், குறைந்த வயதுடையதொரு ரோமன் அடுத்த போப் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அவர் அந்த பொறுப்பில் நெடுங்காலம் இருப்பதுடன், அதிக ஈடுபாடுடன் சேவையாற்றுவதையும் காண முடியும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், "புனித ரோமன் தேவாலயத்தில் இறுதிக்கட்டமாக, பீட்டர் என்ற ரோமன் போப் ஆக அமருவார்.
அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை பல இன்னல்களிலிருந்து நல்மேய்ப்பராக கடந்து செல்ல உதவுவார். அதன்பின், ஏழு குன்றுகளின் நகரம் அழிவைச் சந்திக்கும். இதுவே முடிவு" எனவும் கணித்துள்ளார்.