காதலியின் திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக வந்த முன்னாள் காதலன்! காதலனை கண்டதும் காதலி செய்த காரியம்!
காதலியின் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலனும் காதலியும் அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபகாலமாக வட இந்தியாவில் திருமண சீசன் என்பதால் திருமணத்தில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணிற்கு லட்டுவை ஊட்ட முயற்சி செய்கிறார்.
வடஇந்தியாவில் ஒரே வயதுடையவர்கள் இவ்வாறு இனிப்புகளை பரிமாறி வாழ்த்து சொல்வதது வழக்கம். இப்படியாக அவர் அந்த லட்டுவை நீட்டும் போது அதை அந்த மணப்பெண் வாங்க மறுத்து தன் முகத்தை திருப்பி கொள்கிறார்.
அதனால் துக்கம் தாங்காமல் அந்த மணப்பெண்ணின் முன்னாள் காதலன் அழுதபடியே மணமேடையை விட்டு வேகமாக சென்றார். இதனை கண்ட மணப்பெண்ணும் கண்கலங்கினார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.