ரிசர்வ் பெட்டியில் ஓசியில் 1000 பேர் - சீட் தராமல் அடாவடியில் வடமாநிலத்தவர்!
முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல், டிக்கெட்டும் எடுக்காமல் வடமாநிலாத்தவர் அடாவடியில் ஈடுபட்டனர்.
முன்பதிவு பெட்டி
கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் 1000 வடமாநிலத்தவர் முன்பதிவு செய்யாமல் ஏறியுள்ளனர். மேலும், டிக்கெட் எடுத்து பயணித்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் அடாவடி செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் சிலர் போலீஸாருக்கு புகாரளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டது. பரிசோதனையில், முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் எடுக்காமல் இருந்த
வடமாநிலத்தவர்
சுமார் 1000 வடமாநிலத்தவர்களை வெளியேற்றினர். இந்தக் கூட்டத்தில் பெண்களும் டிக்கெட் எடுக்காமல் ஒரே சீட்டில் பயணித்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இவ்வாறு சம்பவம் தொடர்ந்து நடப்பதால் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.