வட மாநில மாணவர்களை மேம்படுத்த உதவித்தொகை - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Tamil nadu DMK Anbil Mahesh Poyyamozhi Education
By Vidhya Senthil Jan 21, 2025 05:29 AM GMT
Report

 தமிழகத்தில் படித்து வரும் வட மாநில மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேரும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

வட மாநில மாணவர்கள்

தமிழக அரசு மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களையும் மேம்படுத்த உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் எனப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

பள்ளிக் கல்வி துறை

இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரே விதமான நுழைவுத் தேர்வு..நடைமுறைக்கு ஒத்துவராது-முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

ஒரே விதமான நுழைவுத் தேர்வு..நடைமுறைக்கு ஒத்துவராது-முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

அதில், வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியைப் படிக்க வைப்பதாகவும், மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும்,வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் .

 பல்வேறு திட்டங்கள்

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும்,அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித் தொகை ,பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும்

பள்ளிக் கல்வி துறை

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.