Saturday, Mar 8, 2025

தாக்கப்படும் வடமாநிலதொழிலாளர்கள் : பீகார் அதிகாரிகள் தமிழகம் வருகை

By Irumporai 2 years ago
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் திருப்பூர் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர் திடீரென குவிந்ததால் பரபரப்பு நிலவியது அதே சமயம் பீகார் வட மாநிலத் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும்

தாக்கப்படும் வடமாநிலதொழிலாளர்கள் : பீகார் அதிகாரிகள் தமிழகம் வருகை | North State Worker Murdered Of Bihar Official

வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி பரவியது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து, பீகார் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு, தமிழக அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தொழிலாளர் நல அமைச்சர் கணேசன் கலந்து கொள்கின்றனர்