பதிலடிகொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்துவோம் : வடகொரிய அதிபர் எச்சரிக்கை

By Irumporai Nov 19, 2022 10:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வடகொரியா சமீப காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகனை சோதனை நடக்கிறது.

ஏவுகணை சோதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு  வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது.

பதிலடிகொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்துவோம் : வடகொரிய அதிபர் எச்சரிக்கை | North Korean President Nuclear Attack

எச்சரிக்கை

இந்த நிலையில் வடகொரியா அதிபர் ஜிம்ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும், இந்த அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு முழுமையான மோதலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளாஎ