இதெல்லாம் சரியில்ல... ராணுவ பயிற்சிகளை உடனே நிறுத்துங்க.... - ஐ.நா.வுக்கு வடகொரியா கோரிக்கை...!

North Korea
By Nandhini Mar 05, 2023 01:18 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்கா-தென்கொரியா ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வுக்கு வடகொரியா வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.வுக்கு வடகொரியா கோரிக்கை

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஒருங்கிணைந்த இராணுவ ஒத்திகையை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதுபோன்று ஒன்றாக இணைந்து ராணுவ ஒத்திகைகள் மேற்கொண்டால் அது பதற்றத்தை அதிகப்படுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து, சர்வதேச அமைப்புகளுக்கான துணை வெளியுறவு அமைச்சர் கிம் சோன் கியோங் கூறுகையில், இந்த மாதிரி கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டால் மோதலின் அளவை உயர்த்திவிடும். அமெரிக்காவும் தென்கொரியாவும் இந்த மாதம் 10 நாட்களுக்கு மேல் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களால் தடைசெய்யப்பட்ட வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இப்பயிற்சிகள் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

north-korea-us-south-korea-military-drills