வெப் சீரிஸ் பார்த்தது ஒரு குத்தமா? 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய
தென் கொரியாவின் வெப் சீரிஸ் பார்த்ததால் 2 சிறுவர்களுக்கு வடகொரிய அரசு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த நாடகங்களை பார்ப்பது, விநியோகிப்பதை வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
வடகொரியாவை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சேர்ந்து வியாங்காங் மாகாணத்தில் உள்ள பள்ளியில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா சீரிஸ் படங்களை பார்த்துள்ளனர்.
இதையறிந்த வடகொரியா அரசு பொதுஇடத்தில் வைத்து துாக்குத்தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் அக்டோபரில் நடைபெற்றதாகவும் இது தொடர்பான தகவல்கள் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இச்சம்பவத்திற்கு உலக மனித உரிமை அமைப்பு கண்டனங்களை பதிவு செய்துள்ளது.