அச்சு அசலாக கிம் ஜான் உன் போல மாறிய நபர் - பொதுமக்கள் அதிர்ச்சி
வட கொரியாவின் அதிபரான கிம் ஜான் உன் போலதான் ஹேர்ஸ்டைல் வேண்டும் என அடம்பிடித்த வாடிக்கையாளர சிகையலங்கார நிபுணர் ஒருவர் அப்படியே மாற்றியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னின் ஹேர்ஸ்டைல் சர்வதேச தலைப்புச் செய்திகளில் பலமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் வட கொரியாவின் குடிமக்களின் மீது உருவாக்கப்படும் வினோதமான சட்டங்கள் உலகம் முழுவதும் அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
அதுபோல சமீபத்தில் அந்த நாட்டு குடிமக்கள் முடி வைத்து கொள்ளும் ஸ்டைலில் வரையறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் அவரை போலதான் அந்நாட்டின் ஆண்கள் அனைவரும் தலைமுடியை வெட்ட வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் நாட்டில் குறைவான முடி மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கியதாகவும் சொல்லப்பட்டது.
ஒரு நபர் முடி வெட்டுவதற்கு ஒரு முடிதிருத்தும் நபரிடம் கோரிக்கையாக வைக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வட கொரிய அதிபர் கிம் போலவே தனது தலைமுடியை ஸ்டைல் செய்ய அவர் விரும்பினார்.
சிகையலங்கார நிபுணர் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், உண்மையாகவே சவாலை ஏற்றுக்கொண்டு, களத்தில் இறங்கி அச்சு அசலாக அவரை கிம் ஜாங் உன் போல மாற்றினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.