உக்ரைன் ரஷ்யா போர் : இந்த சண்டைக்கு காரணமே அமெரிக்காதான் - வடகொரியா குற்றச்சாட்டு

Russia RussiaUkraineConflict
By Irumporai Feb 27, 2022 10:01 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதான் என வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனில் ரஷிய படைகள் இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது.

இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்று உத்தரவிட்டது.  இந்த பதட்டமான சூழ்நிலையில் உலக நாடுகள் அணைத்தும் உகரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன

இந்த நிலையில் ரஷ்ய உகரைன் இடையே போர் மூல காரணமே அமெரிக்காதான் என வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளப்பக்கத்தில் அமெரிக்கா தான் இந்த போருக்கு முழுக்க முழுக்க காரணம் என குற்றம் சாட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

அமெரிக்கா தன்னிச்சையாக உக்ரைனுக்கு ஆதரவு தரத் தொடங்கியதே இந்த போருக்கு முக்கிய காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.