அமெரிக்காவுடன் போர் ? 8 லட்சம் பேரை சேர்த்துள்ள வடகொரியா : வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவை எதிர்க்க 8 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க வடகொரியா அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் ஏவுகணை சோதனை
கடந்த சில ஆண்டுகளாக தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது, குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவுடன் போர்
இந்த நிலையில் அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் போர் மூளலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதற்காக வடகொரியாவும் தயாராகி வருவதாக தெரிகிறது. இதற்காக ராணுவ பலத்தை அதிகரிக்க வடகொரியா கட்டாய ராணுவ ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவுடனான போரை எதிர்கொள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தை எதிர்கொள்ள ஆர்வமுடன் உள்ளதாக வடகொரியா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஜப்பான் கடல் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது வடகொரியா.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.