ஜப்பானை அச்சுறுத்தும் வடகொரியா : உஷார் நிலையில் ராணுவம்... பதற்றத்தில் மக்கள்
வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் தன்னாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயுதங்களை அதிகரிக்கும் வட கொரியா
வட கொரியா அதன் தடை செய்யப்பட்ட ஆயுதத் திட்டங்களை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

குறிப்பாக கடந்த 10 நாள்களுக்குள் வட கொரியா இரண்டு குறுகிய தூரம் பாய்ந்து இலக்குகளை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நான்கு முறைக்கு மேல் ஏவி சோதனை நடத்தியது. தொடர்ந்து நேற்றும் மீண்டும் ஒரு முறை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது.
ஜப்பான் மீது ஏவுகணை
எப்போதும் தென்கொரியாவை அச்சுறுத்திவந்த இந்த சோதனை தற்போது ஜப்பானையும் அச்சுறுத்தியுள்ளது. நேற்று ஏவிய ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் மீது பறந்து அந்நாட்டை தாண்டி பசிபிக் கடலில் விழுந்துள்ளது.
அதனால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் தன்னாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இந்த சீண்டலுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.