இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு...திருட்டு ரயில் ஏறி வந்தாலும் அடித்து துரத்துவதில்லை - கஸ்துாரி விமர்சனம்
இது வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு..திருட்டு ரயில் ஏறி வந்தாலும் அடித்து துரத்துவதில்லை என வடமாநில விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்துாரி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
திருப்பூரில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அம்மாவட்ட காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
அதே போன்று தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார் பின்னர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்கள் உதவி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் வதந்தி பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்துாரி விமர்சனம்
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ‘’ வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை’’ என பதிவிட்டுள்ளது.
திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் என நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் நடிகை கஸ்தூரியை திமுகவினர் வசைபாடி வருகின்றனர்.
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2023