தமிழகத்தின் வளர்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்கள் உதவி செய்து வருகிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu Chennai Bihar
By Thahir Mar 04, 2023 07:53 AM GMT
Report

தமிழகத்தின் வளர்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்கள் உதவி செய்து வருகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

north-indian-workers-are-helping-cm-mk-stalin

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்கள் தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன் என்றார்.

பீகாரை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தவறான தகவலை பரப்பியதே பிரச்சனையின் தொடக்கமாக அமைந்தது. ஊடகங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சமூக பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிட வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரபரப்புவோர் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மனித குலத்திற்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே தமிழ்நாடு இருந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் அவர்கள் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் என நிதிஷ்குமாரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.   

வடமாநிலத் தொழிலாளர்கள் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்ககள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.