வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்...பதற்றம் தணிந்தது - டிஜிபி சைலேந்திர பாபு

Tamil Nadu Police
By Thahir Mar 09, 2023 10:30 AM GMT
Report

தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தியான செய்திகள் பரவிய நிலையில்,இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தியான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தொழில்துறையுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை காவல் ஆணையர், 8 மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

பதற்றம் தணிந்தது - டிஜிபி சைலேந்திர பாபு 

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

north-indian-attack-issue-dgp-sylendrababu

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் தங்களது ஊருக்கு சென்றுள்ளனர்.