உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறிய மாணவிகள் - தொடரும் பகீர் சம்பவங்கள்
கடந்த சில நாட்களாக வட மாநிலத்தவர் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் , வட மாநில தொழிலாளர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கொலை கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்
இந்த நிலையில் கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. தனியார் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றன. கல்லூரி வளாகத்திற்குள் உள்ளேயே மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. அந்த விடுதி கேண்டினில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய விடுதியில் மாணவ-மாணவிகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உணவு பரிமாறுவதில் நேற்று மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.
கூடுதல் உணவு வழங்கக்கோரி மாணவர்கள் கேட்ட நிலையில் அதற்கு வடமாநில தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, வடமாநில தொழிலாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
பதறிய மாணவிகள்
இந்த மோதலின் போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள கேண்டினுக்குள் நுழைந்துள்ளனர். இதை கண்ட மாணவிகள் அங்கிருந்து பதறி ஓடினர்.
@sunnewstamil @polimernews @ThanthiTV
— Sajeesh (@Sajeesh1311) February 13, 2023
Notice this....in Coimbatore college students are fighting in the canteen.. pic.twitter.com/ih0opxFeAI
இதன் பின்னர் மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர்களையும் - வடமாநில தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தினர்.
இதன் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டு கட்டைகளுடன் சுற்றித்திரியும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.