வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் முடிந்தது! வெய்யிலின் ஆட்டம் தொடங்குகிறது
Chennai
TN Weather
By Thahir
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை அடித்து நொறுக்கியது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றுடன் வடகிழக்கு பருவ மழை முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் அதன் தாக்கம் தென் மாவட்டங்களில் தொடர்ந்தது என்றும் இதனை அடுத்து தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்றுடன் பருவமழை விலகுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, இன்னும் சில நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.