குடும்ப கஷ்டம் காரணமாக லாட்டரி டிக்கெட் விற்ற பிரபல நடிகை

Actressnorafatehi
By Petchi Avudaiappan Oct 01, 2021 10:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே தான் வேலைக்கு சென்றுவிட்டதாக நடிகையும், டான்ஸருமான நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.

கனடாவில் பிறந்து வளர்ந்து தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை நோரா ஃபஹேதி பாகுபலி படத்தில் வந்த மனோகரி பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்த நோரா, கார்த்தியின் தோழா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார். தற்போது டான்ஸ் தீவானே நிகழ்ச்சியின் 3வது சீசனில் நடுவராக நோரா இருக்கிறார். இந்நிலையில் தான் சிறு வயதில் பட்ட கஷ்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 அதில் பண பிரச்சனையாக இருந்ததால் குடும்பத்தை காப்பாற்ற தான் சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதாகவும், உணவகம், பார்கள், ஷவர்மா நிலையங்கள், ஆண்களின் உடை விற்பனை செய்யப்படும் கடை என்று பல இடங்களில் வேலை செய்துள்ளதாகவும் நோரா ஃபஹேதி கூறியுள்ளார்.

மேலும் டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்தேன். அங்கு பலருக்கும் போன் செய்து லாட்டரி டிக்கெட் விற்பது தான் வேலை. மேலும் ஷாப்பிங் மாலில் இருக்கும் கடை ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக இருந்திருக்கிறேன். அது தான் என் முதல் வேலை. 16 வயதில் வேலைக்கு சென்றேன் என்றும் நோரா ஃபஹேதி தெரிவித்துள்ளார்.