‘பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு’ ; இந்தியா முழுவதும் ஒற்றையாளாக சுற்றுப்பயணம் செய்து அசத்தும் வீர பெண்மணி
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த நூர்பீ என்ற பெண் தனியாக இந்தியா முழுவதும் இருச்சக்கர வாகணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பெங்களூருவில் தொடங்கி மகாராஷ்டிரா, குஜராத், தாமன், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்திர பிரதேஷம் வரை கடந்து தற்போது உத்தராகண்ட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும் இவர் இதுவரை 4500 கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளார்.
ஒரு பழமைவாத நம்பிக்கைகளை கொண்ட முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த நான் இந்த சோலோ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதன் முழு நோக்கமே, பெண்கள் இதுபோன்று தைரியத்துடன் முன்வரவேண்டும் என ஊக்கம் அளிக்கவும்,
இந்தியா பெண்கள் தனிமையில் பயணிக்க பாதுகாப்பான நாடு என உலகிற்கு காண்பிக்கவும் தான் என பெருமையுடன் கூறி கேட்போரை புல்லரிக்க செய்கிறார் நூர்பீ.
இந்தியாவின் நான்கு திசைகளையும் உள்ளடக்கிய இந்திய சோலோ ரைடு பைக் மிஷனில் இறங்கி முழுவீச்சில் அசத்திக்கொண்டிருக்கும் இவர், மேலும் பல சாதனைகள் புரிந்து இளம் பருவத்தினருக்கு நல்ல முன்னோடியாக திகழ்வார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.