இவர்கள் யாரும் சாமியார்கள் கிடையாது... கொந்தளித்த மயில்சாமி
சென்னை அருகே உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டு சிவசங்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி ஆடம்பரமாக, ஆசிரமம் வைத்துள்ளவர்கள் யாரும் சாமியார்கள் கிடையாது. இதில் முக்கால் வாசிப்பேர் பித்தலாட்டக் காரர்களாக உள்ளதாக கூறினார்
மேலும்,சாமியாராக இருப்பவர்கள் தான் ஆசிரமம் அமைத்து அதில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு குழந்தைகளையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது. மதத்தின் அடிப்படையில் ஜாதி அடிப்படையில் சில பேர்களை விமர்சனம் செய்து கொண்டு முன்னேறுபவர்கள் அனைவரும் ஊரை ஏமாற்றும் நபர்கள் தான்’ என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.