தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை..

Cmbt market Koyambedu market
By Petchi Avudaiappan Jun 06, 2021 05:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இன்று கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் யாரும் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் முடிந்த பிறகு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்