இனி.. Biology படிக்காதவர்களும் டாக்டர் ஆகலாம் - முக்கிய அறிவிப்பு!
பயாலஜி படிக்காதவர்களும் மருத்துவராகலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
பயாலஜி
மருத்துவ படிப்புகளான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து
அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. இந்நிலையில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாகக் கொண்டு உயர்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்கலாம்.
மருத்துவ படிப்பு
அவர்கள் அனைவருமே நீட் தகுதித் தேர்வை எழுதலாம் என தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நீட் அளவுகோல்களைத் தளர்த்துவது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.