நாமினேஷன் லிஸ்ட்டில் பாவனி - சோகத்தில் ரசிகர்கள்: இந்த வாரம் வெளியேறிடுவாரா?

tamil Bigg Boss Pavani Reddy nominated
By Anupriyamkumaresan Oct 18, 2021 09:32 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

பிக் பாஸ் வீட்டில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரம் வீட்டில் உள்ள பலரும் பாவனியை நாமினேட் செய்துள்ளனர்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல்.

சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனை இன்று பதிவு செய்ய உள்ளது.

நாமினேஷன் லிஸ்ட்டில் பாவனி - சோகத்தில் ரசிகர்கள்: இந்த வாரம் வெளியேறிடுவாரா? | Nomination List Biggboss 5 Pavni Nominated Many

இதனையடுத்து, 15-வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், இசை, பாவனி, அக்‌ஷரா, சின்னப்பொன்னு என இந்த நால்வரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்கிறார்கள்.

இந்த நாளின் முதல் ப்ரொமோதான் இது என்பதால், இன்னும் நிறைய போட்டியாளர்களின் பெயர்களும் நாமினேஷனில் இடம் பெறும் என தெரிகிறது. அபிஷேக், ப்ரியங்கா, ராஜூ ஆகியோர் சின்னப்பொன்னுவை நாமினேட் செய்கின்றனர்.

அக்‌ஷரா பாவனியையும், பாவனி அக்‌ஷராவையும் நாமினேட் செய்து கொள்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இதுதான் இரண்டாவது நாமினேஷன் என்பதால், கடந்த முறை நாமினேட் ஆகாமல் விடுப்பட்ட பாவனியும் இம்முறை பட்டியலில் சேர்ந்துள்ளார்.

இந்த வார எபிசோட் நாமினேஷன்களுடன் விறுவிறுப்பாகும் என தெரிகிறது.