மாதரே.. மாதரே.. உச்சநீதிமன்றம் நீதிபதி பதவிக்கு முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் பரிந்துரை!

SupremeCourt Collegium Supreme Court judges
By Irumporai Aug 18, 2021 11:34 PM GMT
Report

இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் 3 பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைத்துள்ளது.

தற்போது, உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது, இந்த நிலையில் கடந்த வருடங்களில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றனர்,

இந்த நிலையில் சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய 3 பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வரும் நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி. நாகரத்னா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-ல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார்.

கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பி.வி. நாகரத்னா. பின்னர் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால் இந்தியா உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது.