‘‘அப்பாவோட காலத்துல நோக்கியா, மகன் காலத்தில் போர்டு கம்பெனி’’- தி.மு.க - வை சாடிய சீமான்
தந்தையின் ஆட்சியில் நோக்கியா ஆலை, தற்போது போர்டு ஆலை மூடப்பட்டுள்ளது என சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவண குடிலில் வைத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான்:
திமுக செய்த சமூக நீதி என்ன?. சமூக நீதி என்றால் என்ன?. மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று தமிழக முதல்வர் கூறுவாரா?. சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனக் கூறினார்.
மேலும்,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நோக்கியா ஆலை மூடப்பட்டது. தற்போது போர்ட் ஆலை மூடப்பட இருக்கிறது. என்னிடம் ஆட்சியை கொடுத்து இருந்தால், ஒரே இரவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி இருப்பேன் " என்று தெரிவித்தார்.