வேலை இல்லாததால் திட்டிய காதலி - விபரீத முடிவெடுத்த இளைஞர்
வேலை இல்லாததால் காதலி திட்டியதற்கு இளைஞர் விபரீத முடிவெடுத்துள்ளார்.
லிவ்-இன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஜலாலாபாத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி மயங்க் சந்தேல்(27).
இவர் நொய்டாவின் செக்டார் 73 இல் உள்ள ஷௌர்யா பேங்க்வெட் ஹால் அருகே கடந்த 4 ஆண்டுகளாக தனது லிவ்-இன் காதலியுடன் வசித்து வந்துள்ளார்.
சிக்கிய கடிதம்
அந்த பெண்ணுக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை(13.12.2024) மாலை வேலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, மயங்க் சந்தேல் வீட்டில் உள்ள மின் விசிறியில் சடலமாக தொங்குவதை பார்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின், வீட்டிற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அறையில் மயங்க் சந்தேல் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், தனக்கு வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து நாள் முழுவதும் சாப்பிடுவதாக காதலி அடிக்கடி திட்டியதால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.