9 நொடிகளில் தூள்தூளாக தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுரம்!

Delhi Uttar Pradesh
By Sumathi Aug 28, 2022 09:45 AM GMT
Report

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் சில நொடிகளில் தர்க்கப்பட்டது.

இரட்டை கோபுரங்கள்

நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன.

9 நொடிகளில் தூள்தூளாக தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுரம்! | Noida Twin Tower Building Demolished

இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கட்டிடம், குதுப்மினாரைவிட உயரமானது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 3,700 கிலோ வெடி பொருட்கள்

விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானதால், இந்த கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த நொய்டா இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான பணி எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிருவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 3,700 கிலோ வெடிபொருட்களை கட்டிடத்தின் தூண்களில் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வெடிபொருட்கள் வெடித்ததும், அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, நீழ்வீழ்ச்சி கீழே விழுவதுபோல்,

9 நொடிகளில்...

‘வாட்டர் ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் சில நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரம் சரிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளால் எழுந்த புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் போல காட்சியளித்தது.

இரட்டை கோபுரத்தின் கட்டுமான சேதங்களை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இதனால் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் நேற்றே வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.