நிலுவைத் தொகையை செலுத்தாததால் காருக்கு தீ வைத்த நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Sep 15, 2022 07:50 AM GMT
Report

நொய்டாவில் 40 வயதான கட்டுமான ஒப்பந்ததாரர், நிலுவைத் தொகையை செலுத்த தவறியதால், அவருடைய ரூ.1 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ் காருக்கு தொழிலாளி ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காருக்கு தீ வைத்து ஓடிய நபர்

உத்திரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள சதர்பூர் கிராமத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர் , கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையான ரூ.2.68 லட்சத்தை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, பெட்ரோலை எடுத்து வந்த தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இது குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Noida - car on fire