உ.பி.யில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Sep 07, 2022 07:55 AM GMT
Report

உ.பி.யில் மீண்டும் லிப்டில் நாய்க்கடி சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை கடித்த நாய்

நேற்று காசியாபாத், ராஜ்நகர் அருகே சார்ம்ஸ் கவுண்டி சொசைட்டியில் லிப்டில் நாய் ஒன்று சிறுவனின் தொடையில் கடித்தது. இதனால், அச்சிறுவன் வலியால் கதறி துடிதுடித்து அழுதுள்ளான்.

ஆனால், எதுவுமே நடக்காததுபோல் அச்சிறுவன் அழுவதை நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லிப்டில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து அப்பெண் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இளைஞரை கடித்த நாய்

இதேபோல், உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள அபெக்ஸ் சொசைட்டி, செக்டார்-75ல் உள்ள குடியிருப்பு லிப்டில் இருந்த இளைஞரை வளர்ப்பு நாய் ஒன்று தாக்கி கடித்துள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தயவு செய்து நாய் வளர்ப்பவர்கள், வளர்ப்பு நாயுடன் லிப்டில் செல்ல வேண்டாம்.. என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.   

noida-dog-bite-viral-video