தலைகுனிய வைக்கும் தாக்குதல்: முக ஸ்டாலின் கடும் கண்டனம்

attack stalin mamata
By Jon Mar 11, 2021 05:32 AM GMT
Report

மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தொகுதி மக்களை சந்தித்துவிட்டு புறப்பட தயாரான நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட தாக்குதலே என மம்தா கூறியுள்ள நிலையில், விரிவான அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மீது உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.