"விவாகரத்து ஆனால் மனைவி ஜீவனாம்சம் கேட்க முடியாது.."! உயர்நீதிமன்றம் அதிரடி !!
இப்படி விவாகரத்து ஆனால் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என உயர்நீதிமன்ற அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு என்ன..?
கடந்த 2000-ஆம் ஆண்டு இந்து மரபுப்படி திருமணமான பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இறந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் பிரிந்ததை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு மனைவி மனு ஒன்றை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி அவர் தாக்கல் செய்த மனுவில், திருமணத்தின்போது வரதட்சணையாக அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதில் கணவர் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில், மனைவி தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கு அடுத்து மனைவியின் மனுவை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் அதிரடி
இதனை எதிர்த்து மனைவி தரப்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மனைவிக்கு 4 லட்ச ரூபாய் வழங்குமாறு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், கணவர் தரப்பில் மறுசீராய்வு மற்றும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் விசாரணையில், இந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், மனைவி விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே மதம் மாறியதாக சுட்டிக்காட்டி,. சிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.