மீண்டும் நடுவரால் வந்த சர்ச்சை... கடைசி ஓவரில் நிறுத்தப்பட்ட ஆட்டம்...கோபமான ரிஷப் பண்ட்
ஐபிஎல் தொடரில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டத்தில் மீண்டும் நடுவரால் சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வான்கடே மைதானத்தில் நடந்த 34வது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 106, தேவ்தத் படிக்கல் 54, சஞ்சு சாம்சன் 46 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்சரை பவெல் பறக்கவிட, போட்டியில் விறுவிறுப்பு எகிறியது. இதில் 3வது பந்து பேட்ஸ்மேன் வயிற்றுக்கு மேல் வந்ததால் இதனை நோ பால் என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார்.
It was a no ball, clear cut no ball.
— Anurag Maurya?? (@AnuragM88227408) April 22, 2022
Whole crowd was chanting Cheater Cheater
Worst decision from umpire
Sad for rishabh pant #DCvsRR pic.twitter.com/FId7fogPTn
ஆனால் அது நோ பால் இல்லை என்று நடுவர் சொல்ல கடுப்பான டெல்லி அணி பியிற்சியாளர் குழு உறுப்பினர் மைதானத்துக்கு வந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் வீரர்களை ஆட்டத்தை நிறுத்திவிட்டு வரும்மாறு கூறினார். இதனையடுத்து நடுவர்கள் டெல்லி அணியை சமாளிக்க மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
ஆனால் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை குலுக்காமல் சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.