மாஸ்க் அணியாத நடிகர் மீது வழக்குப்பதிவு

Actor Mask Case File JoJo George
By Thahir Nov 14, 2021 09:30 PM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் மாரத் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.

அப்போது அந்த வழியாகச் சென்ற மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜூக்கும், மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு அது கைகலப்பாக மாறியது. காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ஜோஜூ ஜார்ஜின் வாகன கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாரத் போலீசார் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பி.ஒய்.ஷாஜகான் உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

குற்றவாளியான ஜோசப் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் பி.ஒய்.ஷாஜகான் அளித்த புகார் அடிப்படையில்,

மாஸ்க் அணியாமல் பொதுஇடத்தில் மக்களிடம் பேசியதற்காக ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.