சுவர் இல்லை.. மலை உச்சியில் ரூம்; கவனம் ஈர்த்த ஹோட்டல் - எங்கு தெரியுமா?

Switzerland
By Sumathi Apr 03, 2023 07:24 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு அரிய வகையான ஹோட்டல் இணையவாசிகளின் கவனம் ஈர்த்துள்ளது.

 திறந்தவெளி

சுவிட்சர்லாந்து, 2016 ஆம் ஆண்டு சுவிஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் திறந்தவெளி ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இது நல் ஸ்டெர்ன் (Null Stern) என்று அழைக்கப்படுகிறது.

சுவர் இல்லை.. மலை உச்சியில் ரூம்; கவனம் ஈர்த்த ஹோட்டல் - எங்கு தெரியுமா? | No Walls Roof Quirky Null Stern Hotel Swiss Alps

இங்கு, ஜன்னல் , கதவு, சுவர் என்று எதுவும் இல்லாமல் மலையில் தாங்கும் வசதியை வழங்குகிறது. மலையில் இருந்து மாலை சூரியனை பார்ப்பதில் தொடங்கி இரவு முழுவதும் திறந்த வெளியில் மலையின் சாரலில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இருக்கலாம்.

அரிய  ஹோட்டல்

காலை கண்விழிக்கும்போதே சூரிய உதயத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். 'நவீன பட்லர்' எனப் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசி ஒருவர், விருந்தாளிகளுக்குச் சேவை செய்வதற்கும், அதிகக் காற்றில் படுக்கைகளை உருவாக்குவதற்கும் எப்போதும் அருகிலுள்ள ஒரு குடிசையில் வசிக்கிறார்.

சுவர் இல்லை.. மலை உச்சியில் ரூம்; கவனம் ஈர்த்த ஹோட்டல் - எங்கு தெரியுமா? | No Walls Roof Quirky Null Stern Hotel Swiss Alps

மேலும் இந்த ஹோட்டலின் குளியலறை படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு இடங்களில் ஏழு படுக்கைகளை வழங்குகிறது.

ஒரு இரவுக்கான விலை தோராயமாக £251. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,000 ரூபாய். வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் புக்கிங் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும்.