இனி விசா வேண்டாம் - இந்தியர்களுக்கு இனி இந்த நாடு ஈசியாக செல்லலாம்..!
33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் செல்ல விசா தேவையில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரான் அறிவிப்பு
இலங்கை, தாய்லாந்து,மலேசியா நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா அவசியமில்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டது நன்றாகவே வரவேற்கப்பட்டது. இந்நிலையில், அதனை தொடர்ந்து, தற்போது ஈரான் நாடும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி 33 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் நுழைய ஈரான் நாடு அரசு அறிவித்ததுள்ளது. இத்திட்டம் இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த உதவும் என நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரணம் இது தான்
ஈரானில் நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி, ”ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கடந்த 2022ல் மட்டும் 1.30 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததாக ’மெக்கின்ஸே ’ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.