திருப்பதியில் நாளை தரிசனம் ரத்து - பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் தன் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து உள்ளன.
இந்த நிலையில் திருப்பதியில் நாளை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. எனவே அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
வி.ஐ.பி. தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.