ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியே செல்ல தடை - தாலிபான்கள் கெடுபிடியால் அதிர்ச்சி

afghanistan talibanfighters
By Petchi Avudaiappan Dec 27, 2021 09:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் தனியாக வெளியே செல்ல தடை விதித்து தாலிபான்கள் உத்தரவிட்டு உள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது.

தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தாலிபான் அமைப்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணிக்க தடை விதித்து தாலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களை ஒளிபரப்ப ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்தது. அதேபோல், தொலைக்காட்சியில் பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.